மின்சாரம் தாக்கி எட்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மின்சாரம் தாக்கி எட்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். பெரியசாமி தம்பதி செங்கல் சூளையில் பணிக்கு சென்ற நிலையில் வீட்டில் இருந்த மகள் மின்சார ஹீட்டரை தண்ணீரில் வைத்துள்ளார்.

 

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அச்சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.