குண்டும் குழியுமான சாலையில் வெட்டிங் சூட் நடத்திய பெண்..!

கேரளாவில் குண்டும் குழியுமான சாலையில் வெட்டிங் சூட்டிங் எடுத்து இணையத்தில் பரப்பி தனது எதிர்ப்பை வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற மணப்பெண் தனது திருமணத்திற்காக காரில் சென்றுள்ளார்.

 

சாலையை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் சில போட்டோக்கள் எடுத்து தர முடியுமா என புகைப்படக்காரர்களிடம் கேட்டுள்ளார். அப்போது புகைப்படக்காரரும் சம்மதம் தெரிவித்து மணப்பெண்கள் குழியுமான சாலையில் நடந்து வரும் புகைப்படங்கள் வீடியோவில் எடுத்துக்கொண்டனர்.

 

இந்த வீடியோ புகைப்படங்களை சதீஷ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட ஒரு சில மணி நேரத்திலேயே இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் வைரல் ஆகி விட்டன. தனது திருமண நாளில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் போராட்டமாக மாற்றிய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.