இயர்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த மாணவனை தாக்கிய ஆசிரியர்..!

ந்திர மாநிலம் விஜயவாடாவில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவனை அடித்து உதைத்த ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மின்சாரத்தில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது மாணவன் ஒருவன் இயர்போன் போட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அந்த மாணவனை கன்னத்தில் அறைந்தும் காலால் எட்டி உதைத்தும் தாக்கியுள்ளார். இதனை சக மாணவன் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மாணவன் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.