--- --:--:-- --

மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தோழிகள்..!

11

நடிகை மீனா கணவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் மரணமடைந்தார். இளம் வயதில் அவரது மரணம் சினிமா துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்தது. அவரது இறுதி சடங்கிற்கு ரஜினி உள்ளிட்ட பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.

 

மீனா எப்போதாவது அவரது தோழிகள் ரம்பா, சங்கவி, சங்கீதா உள்ளிட்ட நடிகைகள் உடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு வந்தார். கணவர் மறைவுக்கு பிறகு மீனா தோழிகள் உடன் வெளியில் சென்ற போட்டோக்களும் இணையத்தில் வைரல் ஆனது.

 

இன்று நடிகை மீனாவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் தற்போது மீனா அவரது தோழிகள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவரது தோழிகள் அவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்து கொண்டாடி இருக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon