--- --:--:-- --

கர்ப்பம் அடைந்ததை கூட தெரிவிக்காமல் பெண் தற்கொலை..!

2

கர்ப்பம் அடைந்ததை கூட பெற்றோருக்கு தெரிவிக்க முடியாத காரணத்தினால் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டது கேரளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் அமலா.

 

இவருக்கும் எர்ணாகுளத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இரண்டு மாத கர்ப்பமாக உள்ளார். ஆனால் கர்ப்பமாக கூட கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் விடவில்லை. செல்போனைக் கூட பறித்து வைத்துள்ளனர்.

 

பெற்றோர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என அமலா கேட்டால் தாலியை கழற்றி விட்டு செல்லுமாறு கணவர் வீட்டில் கூறியுள்ளனர். தொடர்ச்சியாக கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் கொடுமை காரணமாக அமலா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon