இன்று நடைபெறுகிறது தென்மண்டல கவுன்சிலின் 30வது கூட்டம்..!
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஆகிய தென் மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்குகிறது.
தென் மாநிலங்களின் வளர்ச்சிக்காக தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்கள் அடங்கிய தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. இதில் மாநிலங்கள் இடையிலான எல்லைப் பிரச்சனை, சட்டங்கள் விவகாரம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
தென்மண்டல கவுன்சிலின் 30வது கூட்டம் திருவனந்தபுரம் அருகே உள்ள நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று தமிழகம் தொடர்பான கருத்துகளை எடுத்துரைக்கும் உள்ளார்.
முன்னதாக திருவனந்தபுரம் சென்ற அவர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.
தென்மண்டல கவுன்சில் கூட்டம் என்று முடிந்ததும் இரவு 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீண்டும் சென்னை வந்தடைகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




