புகழ் மற்றும் பென்சியாவிற்கு 1 வருடத்திற்கு முன்பே திருமணம் முடிந்து விட்டதா..?
சின்னத்திரை நட்சத்திரமான புகழ் மற்றும் பென்சியா ஆகியோருக்கு கடந்த ஓராண்டிற்கு முன்னதாகவே திருமணம் நடைபெற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பிரபல சின்னத்திரை நட்சத்திரமான புகழ் பிரபலம் அடைவதற்கு முன்பாகவே பென்சியா என்ற பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான பென்சியா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் புகழ், பென்சி ஆகியோரது கோவையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே பெரியாறு பதிப்பகத்தில் பதிவுத்திருமணம் செய்து இருப்பதும் தெரியவந்தது.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





