கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் 5ஆம் தேதி தொடக்கம்..!
தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் விழா நடைபெறுகிறது .90 ஆயிரம் மாணவிகள் தேர்வாகியுள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





