--- --:--:-- --

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த தலைவர்கள்..!

1

இன்று 70வது பிறந்த நாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை தமிழிசை அனைவரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே தனது ஆசை என கூறியுள்ளார். விஜயகாந்த் நலமுடன் நீடூழி வாழ வாழ்த்தும் கூறியுள்ளார்.

 

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் பூரண உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக கூறியுள்ளார்.

 

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon