13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
அடுத்த 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





