--- --:--:-- --

பிரபல சன் மியூசிக் தொகுப்பாளர் வி.ஜே. தியாவிற்கு குழந்தை பிறந்தது !

13

சன் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து ரசிகர்களிடையே பிரபலமானவர் வி.ஜே. தியா மேனன். இவர் சன் மியூசிக்கில் வி.ஜே வாக தனது தொகுப்பாளர் கரியரை தொடங்கினார். பின் சன் டிவி தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

 

இந்நிலையில் நான்கு ஆண்டு முன் திருமணம் செய்து கொண்ட தியா, தனது கணவருடன் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டார். மேலும் தற்போது தியாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக அவரின் குடும்பதினர் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon