38 வருடங்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரரின் உடல்..!
உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலை சிகரத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் உடல் பாகங்கள் 38 வருடங்களுக்கு பிறகு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின் போது உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்ற வீரரும் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன சந்திரசேகரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன. இதுபோன்ற சூழலில் இந்திய ராணுவத்தினர் பிரதேசத்தில் கடந்த 11ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்த பொழுது போர்க்களத்திலிருந்து சந்திரசேகரின் எஞ்சிய உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிதைந்து போயிருந்த உடல் பாகங்கள் சந்திரசேகர் உடல் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





