ஆறு பெண் மருத்துவர்களை ஏமாற்றி பணமோசடி செய்த இளைஞர்..!
மேட்ரிமோனியில் மருத்துவர் என்று கூறிய ஆறு பெண் மருத்துவர்களை ஏமாற்றி பணமோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை அடையாறு காவல் நிலையத்தில் சங்கர் என்பவர் தன்னுடைய மகன் – மகளை தினேஷ், கார்த்திக் ராஜா என்பவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போது இணையதளத்தில் தினேஷ் கார்த்திக் ராஜா என்பவர் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் எனவும், வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும் பதிவிட்டு இருந்ததும் தெரிய வந்தது. அதில் உள்ள புகைப்படத்தை வைத்து தேடி வந்த நிலையில் விசாரித்த பொழுது போலி புகைப்படத்தை வைத்து ஏமாற்றிய போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து தொலைபேசி எண் மூலம் கண்டுபிடித்து விசாரித்த போது உண்மையான பெயர் கார்த்திக் ராஜா என்பதும் பி.காம் படித்துவிட்டு மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பெற்று மோசடி செய்ததும் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





