விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் திருத்திக்கொள்ள வேண்டும்..!
விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் திருத்திக்கொள்ள வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டைகோட்டையில் போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆன்லைன் ரம்மியை தடுப்பது குறித்து தாங்களாகவே மக்களிடம் கருத்து கேட்கவில்லை என்றும், நீதிமன்றம் சொல்லித்தான் கருத்து கேட்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய அமைச்சர் நிச்சயம் தமிழகத்தில் போதைப் பொருட்களை விற்பவர்கள் மற்றும் அதற்கு துணை நிற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் தங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





