ரன்வீர் சிங் போல புகைப்படம் வெளியிட்ட KPY சரத்..!
கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட் சினிமா நடிகர் ரன்வீர் சிங் நிர்வாண போட்டோ ஷுட் ஒன்று நடத்தினார். அப்புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கினர். அந்த புகைப்பட பரபரப்பு குறைவதற்குள் நடிகர் விஷ்ணு விஷாலும் அதேபோல் நிர்வாண போட்டோ வெளியிட்டார்.
இந்த இரண்டு நடிகர்களின் புகைப்படங்கள் வெளியாக சிலர் பெரிய எதிர்ப்பு தெரிவித்தார்கள்.கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான சரத் நடிகர் மொட்டை ராஜேந்திரன் போலவே காமெடி நிகழ்ச்சிகளில் மொட்டை அடித்துக் கொண்டு கலக்குவார்.
அண்மையில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றார். இப்படி படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் இவர் நிர்வாண புகைப்படம் ஒன்று வெளியிட ரசிகர்கள் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




