போதை காளான்களை விற்பனை செய்பவர்களுக்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை..!
திண்டுக்கல்லில் போதை காளான்களை விற்பனை செய்பவர்களுக்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் போதை காளான் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என துணை பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டு அவர்கள் வெளியே வந்தனர். வெளியே வந்த இரண்டு நாட்களில் அவர்கள் மீண்டும் போதை காளான்களை விற்பனை செய்ததால் அவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




