--- --:--:-- --

சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து..!

7

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை பணிக்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

 

இதற்காக பக்கவாட்டில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற புத்தம் புதிய லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டிலிருந்து தடுப்புகளை உடைத்துக்கொண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

 

இதன்போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon