ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ராகுல் காந்தி கைது..!
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2-வது கட்ட விசாரணைக்காக டெல்லியில் இருக்கும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். சோனியா காந்தியுடன் பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோர் சென்றனர்.
ஏற்கனவே சோனியாவிடம் அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி இருக்கும் நிலையில் மீண்டும் ஆஜராக இருக்கும் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சோனியாகாந்தியை அமலாக்கத்துறை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை வரை பேரணியாக சென்றனர். இதில் ராகுல் காந்தி, கேசி வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சோனியா காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் எதிர்க்கட்சித் தலைவர்களை மத்திய அரசு விசாரணை அமைப்புகள் மூலம் துன்புறுத்துவதாக குற்றம்சாட்டினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடன் ராகுல் காந்தியையும் டெல்லி காவலர்கள் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




