--- --:--:-- --

ஜப்பானில் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு..!

7

ஜப்பானில் முதல் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உலகில் இதுவரை 25 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

குரங்கு அம்மை நோய் பாதிப்பால் அதிக அளவில் பரவும் தன்மை அற்றது. ஏதேனும் தொற்று பாதிப்புள்ளவர் தொடர்பு இருப்பவர் மூலம் மற்றவர்களுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 30 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே ஜப்பானில் கண்டறியப்பட்ட முதல் தொற்று ஆகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon