பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய இளைஞர் ஹெல்மெட்டால் உயிர் தப்பிய சம்பவம்..!
ஹெல்மெட் தானே என்று யாரும் அசால்டாக எடுத்துக்கொள்ளாதீர்கள் சாலை பயணத்தில் அது மிகச் சிறந்த உயிர்க்கவசம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதனை உணர்த்தும் வகையில் பிரேசிலில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அலெக்ஸ் என்ற 19 வயது இளைஞர் ப்ரெட் பாக்கெட்டுகளை வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் வளைவில் திரும்ப முயற்சித்துள்ளார்.
அந்த நேரத்தில் பேருந்து ஒன்று சாலையின் வளைவில் வேகமாக திரும்பி உள்ளது. இந்த நிலையில் டூவீலரில் வந்த இளைஞர் நிலைதடுமாறி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி கொண்டார். அப்போது பேருந்து ஹெல்மெட்டும் டயரோடு உரசிக் கொண்டே சென்றது.
இந்த விபத்தில் இளைஞர் தலையில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த வீடியோ காட்சிகள் அங்குள்ள சிசிடிவி யில் பதிவாகியிருந்தன. இந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த காவல் நிலைய இணை ஆணையாளர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




