விமானத்தில் காற்றழுத்தம் குறைந்ததால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல்..!
துபாயில் இருந்து கொச்சி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தில் காற்றழுத்தம் குறைந்ததால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைவதாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்துள்ளார்.
அதனை எடுத்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து ஆக்சிஜனும் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. மும்பை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமான ஊழியர்கள் உட்பட 258 பேர் பத்திரமாக தரையிறங்கிய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு மூத்த அதிகாரிகள் குழுவை விமான போக்குவரத்து இயக்குனரகம் நியமிக்க உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




