--- --:--:-- --

மின்சாரம் பாய்ந்து முதிய தம்பதிகள் உயிரிழப்பு..!

5

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மின்சாரம் பாய்ந்து முதிய தம்பதிகள் உயிரிழந்தனர். பாண்டமங்கலம் சந்தப்பேட்டையை சேர்ந்த பழனி அம்மாள் என்பவர் தனது வீட்டை ஒட்டி உள்ள ஆட்டு கொட்டகைக்கு சென்றபோது அங்கு அறுந்து இருந்த மின்கம்பியை கவனிக்காமல் பிடித்துள்ளார்.

 

அப்போது அவரை மின்சாரம் தாக்கிய நிலையில் அவரை காப்பாற்ற ஓடிச் சென்ற அவரது கணவர் பரமசிவம் பழனியம்மாள் கையில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி நேரடியாக பிடித்த போது அவரை மின்சாரம் தாக்கிய நிலையில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

 

மாட்டு கொட்டகைக்கு வீட்டிலிருந்து வயர் மூலமாக மின்சாரம் எடுத்து செல்லப்பட்ட நிலையில் அவர் மீது குழாய் போடப்பட்டு இருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்று அந்த பகுதியினர் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon