சாக்லேட் வடிவில் கஞ்சாவை விற்பனை செய்த நபர்..!
கோயமுத்தூரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை நகரில் ஏராளமான கல்லூரிகள் உள்ளதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.
கஞ்சாவை நேரடியாக விற்றால் இருப்பதாக கருதும் ஆசாமிகள் ஒரு சாக்லேட்டை 700 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்எஸ் புரம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் ராஜஸ்தானை சேர்ந்த வியாபாரியை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




