144 தடை உத்தரவு..! ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்..!
தனியார் பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவத்தால் 144 தடை உத்தரவால் சாலைகள் வெறிச்சோடி உள்ளது. தனியார் பள்ளி விடுதியில் ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் மர்ம மரணம் காரணமாக இருக்கிறது என போராட்டக்காரர்கள் நேற்று பள்ளி வாகனங்களை எரித்து நாசமாக்கி வன்முறையில் ஈடுபட்ட 127 பேர் கைது செய்யப்பட்டனர்.
அங்கு பொதுமக்கள் பொது இடங்களில் பொதுமக்கள் கூட வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தடையை மீறி வெளியே வருபவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




