கேரளாவில் மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே லட்சுமி எஸ்டேட் பகுதியை சேர்ந்த பழனி என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்று கொண்டிருந்த போது மண் சரிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




