தந்தை கண்முன்னே மகன் உடல்நசுங்கி பலியான சம்பவம்..!
புதுச்சேரியில் எதிர்திசையில் வந்த பைக்கை பார்த்து வேகத்தை குறைத்து பொழுது இருசக்கர வாகனம் சாலையில் சாய்ந்து விழுந்தது. பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தந்தை கண்முன்னே 10 வயது சிறுவன் உயிரிழந்த விபத்தில் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அதன் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. பன்னீர்செல்வம் என்பவர் 100 அடி சாலையில் பெட்டி கடை வைத்துள்ளார். இவரது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை சென்றவர் தனது மகனை இருசக்கர வாகனம் மூலம் அழைத்துச் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக தன்னுடைய இருசக்கர வாகனத்தின் வேகத்தை குறைத்து போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது புதுச்சேரி நோக்கி வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி அவர் பலியாகியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




