ஓடும் பேருந்தில் ஏற முயன்ற முதியவரை தாக்கிய ஓட்டுனர்..!
சேலம் அருகே ஓடும் பேருந்தில் ஏற முயன்ற முதியவரை அரசுப் பேருந்து ஓட்டுனர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ராசிபுரம் செல்லும் அரசு பேருந்தில் முதியவர் ஒருவர் ஓடும் பேருந்தில் ஏற முயற்சி செய்திருக்கிறார்.
இதில் இவருக்கும், அரசு பேருந்து ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் முதியவரை கண்மூடித்தனமாக தாக்கினர். உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராசிபுரம் போக்குவரத்து பணிமனையில் முதியவர் புகார் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




