--- --:--:-- --

கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் மீது மோதிய கார்..!

10

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வீட்டுக்குள் புகுந்து விபத்து ஏற்படுத்தியது. அப்போது வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் மீது மோதியது. அவரது இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டது.

 

மேலும் விபத்து ஏற்படுத்திய காரில் பயணித்த கோபி மற்றும் அருள்மொழி ஆகியோரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் அந்த காரை எடுக்க காவல்துறையினர் முற்பட்டபோது கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon