--- --:--:-- --

தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..!

8

தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் வரும் 15-ஆம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்வானவர்கள் பட்டியலை சரி பார்க்க வரும் 18-ம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தரவேண்டுமெனவும், தற்காலிக ஆசிரியராக தேர்வானவர் வரும் 20ஆம் தேதி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon