--- --:--:-- --

இவர்தான் என் க்ரஸ் எனக்கூறும் கீர்த்தி ஷெட்டி..!

13

தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த உப்பெண்ணா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இப்படத்தை தொடர்ந்து நானியுடன் இணைந்து ஷ்யாம் சிங்கராய் எனும் படத்தில் நடித்திருந்தார்.

 

தற்போது லிங்குசாமி தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகியுள்ள வாரியார் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இதுமட்டுமின்றி வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.

 

இந்நிலையில், நடிகை கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் அளித்த பேட்டியில், அவரிடம் உங்களுடைய செலிபிரிட்டி க்ரஷ் யார் என்று கேள்வி கேட்டகப்பட்டது. இதற்க்கு பதிலளித்த நடிகை கீர்த்தி ஷெட்டி, சிவகார்த்திகேயன் தான், என்னுடைய செலிபிரிட்டி க்ரஷ் என்று கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவுள்ள புதிய படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என்று தகவல் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon