லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசம்..!
லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக பாட்னாவில் இருந்து ஆர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக்குறைவால் ஜாமினில் உள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் கடந்த சனிக்கிழமை பாட்னாவில் உள்ள ஒரு வீட்டில் கீழே விழுந்ததில் கால் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை அடுத்து லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
உடல்நிலை மோசமடைந்ததால் சிகிச்சைக்காக பாட்னாவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக பீகார் முதலமைச்சர் தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




