ஆம்னி பேருந்து, சொகுசு கார் மோதிய விபத்து..!
தஞ்சை அருகே ஆம்னி பேருந்து சொகுசு கார் மோதிய விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். தஞ்சை அருகே குடிபோதையில் சென்னையிலிருந்து தஞ்சை, தனியார் சொகுசு பேருந்து திருச்சியிலிருந்து திருக்கடையூர் சென்ற சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணம் செய்த பாக்கியலட்சுமி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் பயணம் செய்த 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





