--- --:--:-- --

ரேஷன் கடைகளில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவிப்பு..!

5

தாதுப் பொருட்கள், பனைவெல்லம் போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சில நிபந்தனைகளுடன் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

 

இதன்படி ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள நியாய விலை கடைகளில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டுமெனவும் கிராமப்புறத்தில் உள்ள நியாய விலை கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டுமெனவும் நகர்ப்புற நியாயவிலை கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பணியாளர்களுக்கு செலுத்தப்படும் விற்பனை தொகையில் ஒரு சதவீதம் ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் நியாய விலை கடை நடத்தும் கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon