நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா.!
நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நீண்டகால குடியுரிமை வழங்கும் விதமாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சாருக் கான், அமிதாப் பச்சன், விஜய்சேதுபதி, திரிஷா உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




