பல்டி அடித்து விழுந்த ரோபோ..!
அமெரிக்காவில் உள்ள டிஸ்கி கலிபோர்னியா அட்வென்சர் பார்க்கில் சில தினங்களுக்கு முன் வார இறுதி நாட்களில் மக்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட குவிந்துள்ளனர். வழக்கம்போல ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
குறிப்பிட்ட நேரத்தில் ஸ்பைடர்மேன் உடை அணிந்தபடி ரோபோ மிக உயரத்தில் திரைப் படத்தில் வருவதுபோல சாகசம் செய்ய தயாராக இருந்தது. சாகசமும் தொடங்கியது, திட்டமிட்டபடி பளு தூக்கும் இயந்திரத்தின் இணைக்கப்பட்டுள்ள கையை பிடித்தபடி வானில் பறந்து பல்டி அடித்து தரை இறங்க வேண்டும் என ரோபோவுக்கு ஏற்கனவே ப்ரோக்ராம் செய்யப்பட்டு இருந்தது.
வானில் பல்டி அடித்து தரை இறங்கும் பொழுது அருகில் இருக்கும் கட்டடத்தில் மோதி கீழே விழுந்து விடுகிறது. இதை அங்கிருந்த மக்கள் படம்பிடித்து பகிர்ந்துள்ளனர். இணையத்தில் பலரும் இந்த விபத்துக்கு வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





