திருமணம் செய்து கொள்வதாக கூறி பல பெண்களை ஏமாற்றிய நபர் கைது..!
திருமணம் செய்து கொள்வதாக பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கொடுத்த புகார் தொடர்பாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விக்ரம் என்பவர் முகநூல் மூலமாக பழகி தன்னை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தன்னைப் போல் பல பெண்களை காதலிப்பதாக கூறி அவரை ஏமாற்றி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதால் அதனை உடனடியாக தடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக விக்ரம் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





