--- --:--:-- --

100 மணி நேர போராட்டம்..! ஆழ்துளை கிணற்றில் இருந்து உயிருடன் வெளிய வந்த சிறுவன்..!

4

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 100 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிறுவனை மீட்ட மீட்பு படையினருக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் கிராமத்தை சேர்ந்த ராகுல் காந்தி என்ற 10 வயது சிறுவன் கடந்த 10ஆம் தேதி தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள பயன்பாட்டில் இல்லாத 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் கொண்டு சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்றது. சிறுவனுக்கு குழாய்கள் மூலம் உணவு தண்ணீர், ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.

 

சிறுவனை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறை காவல் துறை, சுகாதாரத் துறையினர் என 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரும் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.

 

80 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பதால் மீட்பு நடவடிக்கைகள் கடும் சவாலாக இருந்ததை தொடர்ந்து 4 நாட்களாக இரவு. பகலாக இடைவிடாத முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்றது. இதில் சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் நேற்றிரவு பத்திரமாக மீட்கப்பட்டார். சிறுவன் மீட்கப்பட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon