தண்ணீர் என நினைந்து மண்ணெண்ணெய் குடித்த குழந்தை..!
கேரளாவில் தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் காவல்துறையை சேர்ந்தவர்கள் கிருஷ்ணபிள்ளை, ரேஷ்மா தம்பதி.
இவர்களின் 1 வயது குழந்தை ஆயுஸ் தவழ்ந்து சென்று பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை தண்ணீர் என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது. குழந்தை மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனையில் குழந்தையை மண்ணெண்ணெய் குடித்து இருப்பது தெரியவந்தது. இருப்பினும் தீவிர சிகிச்சைக்கு பின் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





