--- --:--:-- --

ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

2

பீகாரில் ஓடும் பேருந்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார். மேற்கு சம்பரன் மாவட்டத்தின் பெட்டியாவில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் குரல் கேட்டு மக்கள் அளித்த தகவலில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பேருந்தில் ஆய்வு செய்தனர்.

 

அதன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி அரைமயக்கத்தில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக பேருந்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுனர் மற்றும் உதவியாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon