--- --:--:-- --

ஓடும் லாரியில் திடீரென கழன்று ஓடிய டயர்..!

6

சென்னைக்கு அருகே உள்ள படப்பை கடைவீதியில் நடந்து சென்றவர் மீது ஓடும் லாரியின் டயர் வந்து மோதியதில் அவர் உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முரளி வாடகை ஆட்டோ எடுத்து ஓட்டி வந்த நிலையில் வீட்டிற்கு சாலையோரம் நடந்து சென்றார்.

 

அதே வழியாக தாம்பரம் நோக்கி சென்ற கனரக லாரியின் டயர் அதிவேகமாக சென்று பின் பக்கத்தில் மோதியதன் காரணமாக அவர் பலத்த காயமடைந்து அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon