இம்ரான்கான் கைது செய்யப்படுவாரா..?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் இடைக்கால பிணை காலம் முடிந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் ஆளும் சபாஷ் சரி அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

 

இந்த போராட்டங்களின் பொழுது வன்முறையை தூண்டுவதாக அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் மூன்று வார காலங்களில் தான் இம்ரான்கானுக்கு இடைக்கால தடை வழங்கி தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

வரும் 25ஆம் நாள் வரை இம்ரான் கானை கைது செய்யக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பெஷாவரில் இருந்து இஸ்லாமாபாத் செல்ல இம்ரான்கான் முடிவு செய்துள்ள நிலையில் இடைக்கால பிணை காலம் முடிந்ததும் இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.