மருத்துவமனையில் பிளேடால் கழுத்தை அறுத்த நோயாளியால் அதிர்ச்சி..!

சிலம்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

 

உடனடியாக அனுமதிக்கப்பட்ட பெருமாளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

பெருமாள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மனைவியை அடித்துக் கொலை செய்ததும் தற்பொழுது வெளியே வந்த அவர் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலைக்கு முயன்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.