பெண் மீது ஏறிய பேருந்து சக்கரம்.. தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி..!

புதுச்சேரியில் பெண் ஒருவர் தலையில் தனியார் பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி அவர் உயிரிழந்தார். புதுச்சேரியில் ராஜம்பள்ளி என்று அரசு ஊழியர் வேலைக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

 

அப்போது அந்த வழியே வந்த தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற பொழுது பேருந்து உரசியதில் தடுமாறிக் கீழே விழுந்துள்ளார். அப்போது பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கின்றன. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.