8 முறை பலாத்காரம்.. மகளின் கருமுட்டையை விற்ற தாய்..!

ரோடு மாவட்டத்தில் சிறுமியை வன்கொடுமை செய்து கருமுட்டையை விற்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சூரம்பட்டிவலசு பகுதியில் சிறுமியை பலாத்காரம் செய்து எட்டு முறை அவரின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர். இந்த குழந்தையை மாற்றிக் கொடுத்த ஒரு நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் பெருந்துறை சாலையில் இயங்கி வரும் தனியார் கருத்தரிப்பு மருத்துவமனையில் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.