திடீரென சரிந்து விழுந்த கல்குவாரி..!

ந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அனுமதியின்றி கல்குவாரி இயங்கி வந்த நிலையில் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அந்த கல் குவாரியில் ராட்சத இயந்திரங்கள் மூலம் கற்களை தோண்ட முற்பட்ட பொழுது மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது.

 

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.