மகனுக்காக ரேஸ் பைக் மாடலில் சிறிய ரக இருசக்கர வாகனம் செய்த தந்தை..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடையாம் பட்டியை சேர்ந்த இரு சக்கர வாகன மெக்கானிக் தங்கராஜ் என்பவர் கேடிஎம் ரேஸ் பைக் மாடலில் சிறிய ரக வாகனத்தை வடிவமைத்துள்ளார். அதனை அவர் தனது மகனுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார்.

 

அவர் புதிய ஸ்கூட்டி உருவாக்கியது அந்த பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கடந்த ஒரு வருடமாக தனது சொந்த முயற்சியால் தங்கராஜ் என்ற சிறிய இருசக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார்.