தன்னை தானே திருமணம் செய்துகொள்ளும் பெண்..!

ந்தியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். இவர் ஷாப் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். மற்ற பெண்களைப் போலவே ஜூன் 11ம் தேதி நடைபெற உள்ள தனது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.

 

 

இந்த திருமணத்தில் மணமகன் மட்டுமே இல்லையே தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு முதல் முறையாக குஜராத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதுகுறித்து அந்த பெண் கூறும்பொழுது சிறுவயதிலிருந்து திருமணம் செய்து கொள்ளக்கூடாது என நினைத்ததாகவும், ஆனால் தான் ஒரு மணமகளாக வேண்டுமென்று விரும்பியதாகவும் கூறினார். அதனால் தன்னைத் தானே மணந்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.