ஷுவிற்குள் சுருண்டு கிடந்த நல்ல பாம்பு..!
கர்நாடகாவில் ஷுவிற்குள் நல்ல பாம்பு ஒன்று சுருண்டு கிடந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக இளைஞர் ஒருவர் உயிர் தப்பினார். தும்கூர் புறநகர் பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று கிரிக்கெட் விளையாடுவதற்காக தனது ஸ்போர்ட்ஸ் உடை அணியக் முற்பட்டுள்ளார்.
அப்பொழுது பாம்பு சுருண்டு கிடப்பதை பார்த்த அவர் அதிர்ந்து போனார். பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர் அதனை லாவகமாக பிடித்து சென்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





