--- --:--:-- --

முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

9

திருச்சி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாநகராட்சி அலுவலகத்தில் திடீரென ஆய்வு செய்தார். டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சரின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வினை மேற்கொண்டார். அப்பொழுது அலுவலக வருகை பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை ஆய்வு செய்த முதல்வர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

 

மக்களுக்கான சேவைகளை தாமதமின்றி முடிக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி மாநகர மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் செயல்பாடுகள் குறித்தும் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியில் நிலை மற்றும் திட்டப்பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

 

தான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும் என்று கூறிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மக்களுக்காகத்தான் அரசு என்றும் மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு என்றும் கூறியுள்ளார்.

 

அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பி செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon