மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு..!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பூசாரிபட்டி பாப்பான் குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாப்பான்குளத்தில் நான்கு சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் அந்த சிறுவர்களின் மூன்று பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். மகன்கள் இறந்ததை கேட்ட அதிர்ச்சியில் தந்தை மயங்கி விழுந்துள்ளார். தந்தைமணப்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




